ராசிபுரம் திருக்கோவிலில் பௌர்ணமி பங்குனி உத்திர சிறப்பு பூஜை

ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பௌர்ணமி பங்குனி உத்திர சிறப்பு பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசக்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கும் ஸ்ரீ பால முருகனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்தரம் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல் ஸ்ரீ பால முருகன் சுவாமிக்கும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முருகர் பாடல்கள் பாடி சிறப்பித்தனர். இந்த பங்குனி உத்திர கோவில் விழாவில் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்த்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story