முருகன் கோயிலில் பங்குனி உத்தர சிறப்பு பூஜை

சங்ககிரி: அக்கமாபேட்டை சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்துள்ள அக்கமாபேட்டை, பாவடிதிடலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தினையொட்டி ஸ்ரீ சுப்ரமணியர் உடனமர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமிக்கு தங்ககவசம் பொருத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் அதிகமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமிகளை வணங்கிச் சென்றனர். அதனையடுத்து மாலையில் ஸ்ரீ சுப்ரணியர் உடனமர் வள்ளி, தெய்வானை உற்சமூர்த்தி சுவாமிகள் அமர்ந்து வந்த திருத்தேரினை பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து வந்தனர். முன்னதாக கோபூஜை நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story