பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா

பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா

பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழாவில் கோவா கவர்னர் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் உள்ள முக்கியகோவில்களில் ஒன்றான கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மீனபரணி தூக்க திருவிழா தேவஸ்தான தந்திரிகளின் தலைமையில் திருக்கொடி யேற்றத்துடன் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் பாடுகிறார். தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திர நாயர் ஸ்ரீ பத்திரகாளி தேவஸ்சம் தலைமை தாங்குகிறார். செயலாளர் மோகன் குமார் வரவேற்று பேசுகிறார்.

கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை தொடங்கி வைக்கிறார். அருள்மொழி பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ - சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள். - சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ தலைவர் சோமநாத், அமைச்சர் மனோதங்கராஜ். கேரளா முன்னாள் மந்திரி சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், எம்.ஆர்.காந்திமற்றும் கொல்லங்கோடு நகராட்சி தலைவி ராணி ஸ்டீபன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றுகின்றனர்.

நிர்வாக குழு பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி நன்றி கூறுகிறார்.விழாவையொட்டி தினமும் காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்ய தரிசனம், அபிஷேகம், உஷாபூஜை, கணபதி ஹோமம், சோபான சங்கீதம், மதிய பூஜை, அன்னதானம், மாலை தீபாராதனை, இரவு பூஜை ஆகியவை நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டினர் செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story