தோசம் நீக்கும் பட்டீஸ்வரம் துர்க்கை

தோசம் நீக்கும் பட்டீஸ்வரம் துர்க்கை

பட்டீஸ்வரம் துர்கை அம்மன்

பட்டீஸ்வரம் துர்க்கை இங்கு வந்து துர்கைஅம்மனை வணங்குவதினால் கிடைக்கும் பலன்கள்

வருடத்திற்கு ஒரு முறையாவது பட்டீஸ்வரம் துர்கைஅம்மனை வணங்குவதினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம், ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும், மன துக்கம் விலகும், காரிய வெற்றி கிடைக்கும், பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள்- பெண்களுக்கு விலகும், குடும்ப வாழ்கை அமைதியாகும் ,எழுமிச்ச மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும். பட்டீஸ்வரம் என்ற ஊர் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது.

பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும் . காரணம் ராகு தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில்தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது. சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் தமது அரண்மனைப் பாதுகாக்க நான்குபுறங்களிலும் துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம்.

அவர்களே இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக நம்புகிறார்கள். இந்த பட்டீஸ்வரம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள். இந்த ஐந்து கோபுரங்களை உள்ளடக்கிய மாபெரும் ஆலயம் தோன்றியது ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர்கள் மற்றும் நாயக மன்னர்களால் விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. துர்க்கை அம்மனின் சன்னதிக்குப் பின்புறமாக ஞானவாபி குளம் உள்ளது.

அதன் கரைகளில் நாக தோஷத்தை நீக்கிக் கொள்ள நாகர்கள் (நாகங்களின் சிலைகள்) அமர்ந்து உள்ளனர். அதன் எதிரில்தான் கொடிமர விநாயகரும் சன்னதியில் அமர்ந்து உள்ளார். அதன் பின்புறத்தில் உள்ள நுழை வாயில் வழியே சென்றால் ஞானாம்பிகை மற்றும் பட்டீஸ்வரர் தனி ஆலயங்கள் உள்ளன. ஆனால் இரண்டுமே பட்டீஸ்வரர் ஆலயத்து நான்கு பக்க சுவர்களுக்கு உள்ளேதான் அமைந்து உள்ளன. அப்படி என்றால் அந்த ஆலயத்தின் மொத்த பரப்பளவை எண்ணிப் பாருங்கள். துர்க்கை அம்மன் வரலாறு வேத காலத்தில் பார்வதி தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தாள்.

அவள் இந்த இடத்தில் வந்து தனிமையில் தவம் இருக்கத் துவங்கியபோது அவளுக்கு உதவுவதற்காக தேவேர்கள் அந்த இடத்தில் மரம், செடிகள், கொடிகள் என அமைத்து வனபிரதேசமாக அதை ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவியாக இருக்க காமதேனு தனது பெண்ணான பட்டியையும் அனுப்பி வைத்தது. பார்வதி நின்று கொண்டே பரமேஸ்வரரை நினைத்து தவம் இருந்தாள். பார்வதியின் கடுமையான தவத்தைக் கண்ட சிவனார் அவள் வேண்டுகோளை ஏற்று அவளுக்கு சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கேயே துர்கையாக இருந்து கொண்டு மக்களின் துயரங்களை துடைத்து அருளுமாறு கூறினார்.

இங்கு நீ வந்து தவம் செய்ததினால் இது தவ வலிமை பெற்ற பூமி ஆனது. நீ செய்துள்ள தவத்தினால் உனது சக்தியை உள்ளடக்கிய பூமி ஆகிவிட்டது இது. இந்த இடமே அனைத்து தேவர்களாலும் உனக்காக உருவாக்கப்பட்டு உள்ளதினால் இது தெய்வ பூமி ஆயிற்று. நீயே என்னிடம் சாப விமோசனத்தை இந்த இடத்தில் பெற்றுள்ளாய். அதனால்தான் ராமரும் இங்கு வந்து என்னை பூஜித்து தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்கு சமமான புனித தீர்த்ததையும் ஏற்படுத்தி உள்ளார். இங்கு வந்து உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். நீ அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைந்து கொண்டு இருப்பாய். இத்தனை பெருமைகளையும் பெற்ற இந்தத் தலமே என்னுள் பாதியாக உள்ள உனக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமைந்து இருக்கும். எனக் கூறினார்.

அது முதல் இங்கு உள்ள துர்க்கை மகிஷாசுரன் தலை மீது நின்று கொண்டு, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு எட்டு கைகள் மற்றும் நான்கு கண்களையும் கொண்டு காட்சி தருகிறாள். அவள் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு போன்றவை உள்ளன. ஒரு கையால் அபாய முத்திரை மற்றொரு கையில் கேடயம் கொண்டு காட்சி தருபவள் எப்போதுமே ஒன்பது கஜப் புடவையுடனே காட்சி அளிக்கின்றாள். (ஒன்பது கஜப் புடவையை மிகவும் ஆசாரமான வைதீகமான குடும்பத்துப் பெண்கள் அல்லது வயதான தாயார்களே கட்டிக் கொள்வார்கள். முக்கியமாக அனைத்து வைபவங்களிலும் பூஜைகளிலும் ஒன்பது கஜப் புடவை அணிவதே விசேஷமானது என்பார்கள்.

அது போலத்தான் ஆண்களும் ஒன்பது முழ வேஷ்டிகளை உடுப்பது பழக்கம். இதற்கான காரணம் இரண்டு உள்ளதாக பெரும் பண்டிதர்கள் கூறுகிறார்கள். நமது நாபியில் இருந்து வெளியாகும் சக்தி நமது பின்புற முதுகுத் தண்டில் போய் அங்கிருந்து மூளையை சென்றடையும்போது ஞானம் பிறக்கும் ,குண்டலினி சக்தி மேலும்பிச் செல்லும் என்ற தாத்பர்யத்தை வெளிப்படுத்துவது ஒரு காரணம். அதனால்தான் புடவை மற்றும் வேஷ்டிகளின் ஒரு நுனி நாபிப்பகுதியிலும் மற்றொரு நுனி இரண்டு கால்களிடையே சென்று பின்புற முதுகின் கீழ் பகுதியில் ஒரு பாதை போல அமைக்கப்பட்டு பின்னால் வைக்கப்படுகின்றது . இன்னொரு முக்கியக் காரணம் இந்த துணிகளின் மடித்து மடித்து வைக்கப்பட்டு உள்ள பகுதி இரண்டு கால்களின் இடையே புகுந்து செல்வதினால் ஆண் பெண் இருவரின் காமத்தை தடுத்து நிறுத்தி விடுகின்றது என்பதே. காமத்தை தொலைத்து விட்டே நாம் இறைவனின் சன்னதிக்கு செல்ல வேண்டும் என்பதை எப்போதுமே நினைவுறுத்திக் கொண்டு இருக்கும் காட்சி அது ).

மேலும் ஆன்மிகம் தகவல் அறிந்தது கொள்ள பக்கத்தை லைக் செய்யுங்கள் மற்றவர்கள் தெரிந்து கொள்ள பகிர்ந்து கொள்ளுங்கள் பதிவு Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம் துர்கையின் சன்னதியை சுற்றி வலம் வரவும், தரையில் உருண்டு அங்கப் பிரதர்ஷணம் செய்ய உதவியாகவும் இருக்க மேற்கூரை போடப்பட்ட பளிங்குக் கல்லால் தரை போடப்பட்டு மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் ஹோம சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் ஒரு தனி இடமும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆகவே இங்கு தாயாராக காட்சி அளிப்பவளுக்கு ஒன்பது கஜப் புடவையே சாத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அம்மனின் சன்னதிக்கு வந்தாலே மனதில் உள்ள காமம், குரோதம் அடங்கி ஞானம் பெருகுமாம். இங்கு நமது தாயாராக காட்சி அளிப்பவள் ராகு பகவானுக்கும் தாயாராகவே காட்சி தருகிறாளாம்.

ஆகவே ராகு பகவான் தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை பூஜிப்பதினால் ராகு பகவானின் பூஜை காலமான அந்த ராகு காலத்தில் வந்து எவர் ஒருவர் துர்கையை பூஜிக்கின்றார்களோ அவர்களை தனது தாயாரான துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர் எனக் கருதும் ராகு பகவான் அவர்களுக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வாராம். அதனால்தான் இந்த தளத்தில் ராகு காலத்தில் வந்து பூஜைகளை செய்து துர்கை வேண்டுவது வழக்கமாக உள்ளது. அது மட்டும் அல்லாது செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைப் போட்டு பூஜிக்கின்றாராம். அதனால்தான் இந்த துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டிக் கொண்டால் செய்வாய் தோஷமும் விலகுமாம்.

Tags

Next Story