கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது
நாமக்கல் மாவட்டம் .குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித்திருவிழா மிக பிரபலமானது. 15 நாட்கள் பூச்சாட்டு, சக்தி அழைப்பு, மகா குண்டம் இறங்குதல், இரு நாட்கள் மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை, அம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல் விழா, மஞ்சள் நீர் திருவீதி உலா என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் முக்கியமானது. அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரி அம்மனிடம் வேண்டுதல் வைத்து, அது நிறைவேறி, அலகு குத்திக்கொண்டும், குண்டம் இறங்கியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா ஜன. 21ல் நடைபெறவுள்ளது. இதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டு, அரண்மனை யாகசாலை பந்தல் அமைக்கும் பணி, கோவில் வளாகம் முழுதும் வர்ண வேலைப்பாடுகள், சிற்ப வேலைபாடுகள் ஆகியன நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story