ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு - கடும் குளிரிலும் பக்தர்கள்

நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - கடும் குளிரிரும் பக்தர்கள் திரண்டனர்

நாமக்கல் அரங்கநாதர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும். மலையை குடைந்து கட்டப்பட்ட இக்கோயில் புராதன சிறப்புமிக்கது. நாமக்கல்லில் மட்டும் தான் பெருமாள் நின்ற நிலை, நரசிம்ம மூர்த்தியாக அமர்ந்த நிலை, அரங்கநாதராக சயன நிலை என மூன்று நிலைகளில் காட்சியளிக்கிறார். பூலோகத்தில் பிரம்மனுக்கு எங்கும் கோயில்கள் இல்லாத நிலையில் நாமக்கல்லில் நரசிம்மசுவாமி கருவறையில் பிரம்ம தேவரின் உருவம் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அரங்கநாதரின் காலடியில் மகாலட்சுமி தாயார் அமர்ந்து வணங்கும் நிலையில் உள்ளார். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் திருப்பாவை திருவெம்பாவை பாடப்பட்ட விளக்கு பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருவரங்கத்தை போலவே நாமக்கல் அரங்கநாதர் கோவிலிலும் பரமபதம் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்கு புறம் குடைவரை கோயிலாக ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. கார்கோடன் மீது அனந்த சயனத்தில் ரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.இந்த கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் எனும் பரமபதவாசல் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்புபூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார்கள் திறந்து வைத்தனர். முதலில் சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர். சொர்க்காவசல் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, நாமக்கல் எம்எல்-ஏ ராமலிங்கம், மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன், நகர்மன்ற தலைவர் கலாநிதி, கோயில் அறங்காவல்குழுத்தலைவர் நல்லுசாமி, கோயில் உதவி ஆணையர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாத பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே பல ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி திரிசனம் செய்தனர்.

நாமக்கல் டிஎஸ்பி தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் வளாகம் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா. கோயிலை வளாகத்தை , கடைவீதி, மெயின்ரோடு என 50 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Tags

Next Story