இராசிபுரம் காசி விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா

இராசிபுரம் அருகே உள்ள அருள்மிகு காசி விநாயகர் திருக்கோயில் தெய்விகப் பூங்காவில் 27 ஜென்ம நட்சத்திர விருட்ச வன ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் பொன்மலை, உலவாய்மலை, அலவாய்மலை, சித்தர் மலை என அழைக்கப்படும் மலைச்சாரல் உள்ளது. அத்தகைய சிறப்பு பெற்ற மலைச்சாரலில் சேலம் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு காசி விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் 27 ஜென்ம நட்சத்திர விருட்ச வனாலயத்தில் 18 சித்தர்கள் அருட்சபையை புதியதாக அமைத்துள்ளார்கள். திருப்பெரும்திரு. சுவாமி நிர்லிப் தானந்தாஜு மஹராஜ், IAS உதவித் தலைவர், தெய்வீக வாழ்க்கைச் சங்கம், ரிஷிகேஷ் அவர்களின் அருள் தலைமையில், திருக்கைலாய மரபு மெய்கண்டார் வழி பேரூராதீனம், 25 ஆம் பட்டம் குரு மகா சன்னிதானம் கயிலைப் புனிதர் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார் அவர்களின் அருள் ஆசியுடன் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றம் பேரூராதீனம் கோயமுத்தூர் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை வேள்வி வழிபாட்டு நிகழ்வுகள் முதற்கால வேள்வி, எண்வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது. இரண்டாம் நாளின் இரண்டாம் கால வேள்வி அதைத் தொடர்ந்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் சித்தர் வாழ்வியல் நெறியில் காக்கும் சித்தர் ரகசியம் பற்றி அறிவியல் சித்தர் முனைவர் கோ. அன்புகணபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சுவாமி நிர்லிப்தானந்தாஜு பேசும் போது 18 சித்தர்கள் மறைந்தாலும் அவர்களின் ஆன்மா இன்னும் இருக்கிறது. இங்கே அந்த 18 சித்தர்களை நிறுவி உள்ளீர்கள் அதை தொடர்ந்து வழிபட வேண்டும். அப்பொழுது உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள். ஒவ்வொருவரும் நான் யார் என்பதை உணர்வீர்கள். உலகில் வேறு எங்கும் இல்லாமல் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் இத்தனை சித்தர்கள் இருக்கிறார்கள் என்பது நமது அனைவருக்குமே பெருமை. இந்த சித்தர்களை எல்லாம் நீங்கள் வணங்குவதால் தான் தமிழ்நாடு இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது. அவரவர்க்குரிய நட்சத்திரத்திற்கு உண்டான சித்தர்களை வணங்க வேண்டும். நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாலும் ரிஷிகேசில் உள்ள சிவானந்தா நினைவு அறக்கட்டளை தலைவராக இருந்தாலும் சிவானந்தரின் போதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பதவியை திறந்து விட்டு மக்களுக்கு தொண்டாற்றி வருகிறேன் என்று கூறினார். மேலும் இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வளாகத்தில் பதினெட்டு சித்தர்கள் அமைக்க உதவிய பெருந்தகையோர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பில் நன்றி தெரிவித்தனர். இவ்விழாவை சிறப்பான வரவேற்பும் விழா ஒருங்கிணைப்பும் திருப்பணி செம்மல் அருட்செல்வர் கை. கந்தசாமி, தலைவர் அருள்மிகு காசி விநாயகர் கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை துணைத் தலைவர் உலக சமுதாய சேவா சங்கம் சேலம் மண்டலம். முனைவர் மு.அ உதயக்குமார் மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு ஆகியோர் நன்றியுரை ஆற்றினார். விழா நிறைவில் அனைவருக்கும் பிரசாதபையும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story