நாமக்கல்லில் சைவ சித்தாந்தம் வகுப்பு ! விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாமக்கல்லில் சைவ சித்தாந்தம் வகுப்பு ! விண்ணப்பங்கள் வரவேற்பு!மாதத்தில் முதல் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நடக்கும்.
மதுரை தருமையாதீனம்மடம் சார்பில் சைவ சித்தாந்தம் வகுப்புகள் நாமக்கல்லில் விரைவில் துவங்கவுள்ளன. சைவ சமய தத்துவம், திருமுறை சாத்திரம் பற்றி சைவ சித்தாந்த வகுப்புகள் வருகிற ஏப்ரல்.14ல் துவங்குகிறது. சாத்திர வேத வல்லுனர்களால் வகுப்பு நடத்தப்படும். இரண்டாண்டு பயிற்சியில் தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கு 'சைவ சித்தாந்தப் புலவர்' மற்றும் நான்காண்டு பயின்று தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கு 'சைவ சித்தாந்த கலாநிதி' என சான்றிதழ் வழங்கப்படும். மாதத்தில் முதல் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நடக்கும். ஆண்டுக்குப் பயிற்சி மற்றும் புத்தகக் கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பயின்ற இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு பசுமை மா. தில்லை சிவகுமார் சிட்கோ, பரமத்தி சாலை, நாமக்கல் தொடர்புக்கு 94432 24921

Tags

Read MoreRead Less
Next Story