நாகூர் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழா

நாகூர் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழா

சந்தன கூடு ஊர்வலம் 

நாகூர் ஆண்டவர் தர்கா 167 வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள புகழ்பெட்ட ஆண்டவர் தர்கா 167 வது கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது. 21ஆம் தேதி வான வேடிக்கை ,22 ஆம் தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று 23ஆம் தேதி இரவு நடந்தது.

தமிழ்நாடு அரசால் சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு தேவையான சந்தன கட்டைகள் வழங்கப்பட்டது இந்த நாள் சந்தன கட்டைகள் அரைக்கப்பட்டு சந்தனம் பூசு நிகழ்ச்சிக்காக நாகூர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்ட சந்தன குடங்களில் நிரப்பப்பட்டு நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்தனக் குடங்கள் பெற்று நாகப்பட்டினம் யாஹூசைன்பள்ளிவாசல் வந்தடைந்தது. அதன் பின் யாஹூசைன்பள்ளிவாசலில் இருந்து நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்டு அபிராமி அம்மன் திருவாசகம் வந்தடைந்தது. உடன் சாம்பிராணி சட்டி ரகம் நகரா மேடை மற்றும் பல்வேறு மின் அலங்காரங்கள் வடிவில் சந்தனக்கூடு ரத்தத்தின் முன் பின் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அணி வகுத்து சென்றனர். இந்த சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினம் புதுப்பள்ளி தேர்வு வழியாக நூல் கடை தெரு வெங்காய கடை தெரு உள்ளிட்ட தெருக்கல் வழியாக சென்றது பின்னர் அண்ணா சிலை பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது இதை தொடர்ந்து அங்குள்ள கூட்டு பாத்திகா மண்டபத்தில் பாத்தியா ஓதிய பின்னர் வார தெரு அலங்கார வாசல் வழியாக அங்குள்ள பாரம்பரிய முறை காரர்கள் வீட்டில் சந்தனக்கூடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது.

இதை அடுத்து கால் மாட்டு வாசல் வழியாக சந்தனக்கூடம் தர்கா உள்ளே கொண்டு செல்லப்பட்டதுஇதை எடுத்து இன்று அதிகாலை ஆண்டவரின் சமாதி அறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக்கூடங்களில இந்த சந்தனத்தை பரம்பரை கலிபா ஆண்டவர் சமாதிக்கு பூசினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர். வரும் 27ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுறுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story