செம்மலையில் 20 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

செம்மலையில் 20 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

எம்.ராசாம்பாளையம் செம்மலையில் 20 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

எம்.ராசாம்பாளையம் செம்மலையில் 20 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

நாமக்கல் அருகே ராசாம்பாளையம் அறியாத ஊற்று, செம்மலை மும்மூர்த்தி ஸ்தலத்தில், வரும் 20ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகிறது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, எம்.ராசாம்பாளையத்தில், அறியாத ஊற்று செம்மலையில் மும்மூர்த்தி ஸ்தலம் உள்ளது. இது, ஸ்ரீ சனிஸ்வரர் சிறப்பு வழிபாட்டு ஸ்தலமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வழிபடுபவர்களின் அனைத்து துயரங்களை போக்குவரதுடன், வியாபாரம், தொழில், ஆயுள் அபிவிருத்திகளையும், திருமணத்தடை, புத்திரதோஷம், குடும்ப தோஷம், தார தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் சனீஸ்வரன், மேற்கு திசை நோக்கி தனி சன்னதியாக அமைந்துள்ளது.

இக்கோவிலில், ஆண்டு தோறும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, வரும், 20ம் தேதி, காலை 90 மணிக்கு, சனி பகவான், மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்று காலை, 9 மணிக்கு, மங்கள இசையுடன் சனிப்பெயர்ச்சி விழா நிகழ்ச்சி துவங்குகிறது. 9.30 மணிக்கு, கருப்பனார் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் துவங்கி, கோயிலை வந்தடைகிறது. தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு, மகா கணபதி ஹோமம், கலசம் மற்றும் நவக்கிரஹக பூஜையும், சனீஸ்வரர் காயத்ரி ஏஹாமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு மணிக்கு, மஹா பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை மற்றும் சனீஸ்வரனுக்கு மகா அபிஏஷகம் நடக்கிறது. மேலும், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, செம்லையில் எழுந்தருளி உள்ள ராஜகணபதி, ராஜராஜேஸ்வரன், ராஜராஜேஸ்வரி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், மகா விஷ்ணு, வள்ளி மரம் சமேத பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வர பகவான், நவக்கிரஹங்கள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சியில், கடகம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story