50 கிலோ அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி - திரளான பக்தர்கள் பங்கேற்பு !!

50 கிலோ அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி - திரளான பக்தர்கள் பங்கேற்பு !!

கைலாசநாதர் சுவாமி 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம், சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலானது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் என்றும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தனி அம்பாளுக்கு மஞ்சள்,திருமஞ்சனம், சந்தனம்,பன்னீர்,இளநீர்,குங்குமம்,பால்,தேன் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, 50 கிலோ அன்னத்தால் மூலவரான ஸ்ரீ கைலாசநாதர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கைலாசநாதரை வழிப்பட்டனர். இந்த அன்னாபிஷேகம் வழிபாடு கோடி புண்ணியம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story