பாவம் மனிதத்தன்மை மன்னிப்பு தெய்வத்தன்மை!
மன்னிப்பு தெய்வத்தன்மை
'க்ஷமயாதரித்ரி' என்பதுவே உற்றவாக்கியம். எப்பேற்பட்ட துன்புறுத்துதலையும் சகிக்கும் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளவும் மன்னிக்கவும் தயாராகும் தன்மை மாபெரும் மதிப்புள்ள சொத்து என்பதே இவ்வாக்கியம் கூறுகின்றது. மனித வம்சத்தின் விடுதலைக்காக அவதரித்த இறைமகன் இயேசுநாதர் சிலுவையில் துன்பமும் மரணமும் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதும் தன்னைத் துன்புறுத்தும் பாவிகளை மன்னிக்குமாறு பிதாவினிடம் வேண்டிக் கொண்டிருந்தார். பாவம் மனிதத்தன்மையும் மன்னிப்பு தெய்வத்தன்மை என்றே ஆசாரியர் கூறியுள்ளனர். பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படும் போது மனிதன் வானளாவிய மலைச்சிகரங்களையும் காலடிக்கு வரவழைக்கலாம். எந்த சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல் மன்னிக்கும் திறன் இருப்பது மிக கௌரவமான தன்மையே. தவறுகளை மன்னிக்கின்றவன் மனதாலும் உடலாலும் பெரும் சாதனைகளைக் கண்டடையலாம், என்பது முன்னோர் பலருடைய அனுபவம்.
பிறருக்கு மன்னிப்பளிக்க ஒருவர் பெற்றிருக்கும் திறனும் அது அவருடைய உடல் நிலையில் உருவாக்கும் மாற்றங்களும் வயதுக்கேற்றவாறு வேறுபட்டிருக்கும் என்று சில கண்டுபிடிப்புகள் விளக்குகின்றன. மன்னிப்பளித்தல் என்பது பல கோணங்களில் பயனளிக்கும் ஒன்று என அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்திலுள்ள டாக்டர் லாரன் எல். டாசன்ட் சுட்டிக் காட்டியிருக்கின்றார் வயது நிறைந்த 1400 நபர்களில் ஐந்து மாதங்கள் நடத்திய ஆராய்ச்சியில் மன்னிப்பளித்தாலும் உடல் நிலையும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர். பொதுவாக 18-க்கும் 44-க்கும் இடைப்பட்ட மத்திய வயதினர்கள். வயதானவர்களுடன் ஒப்பிடும் போது மன்னிப்பளிக்கத் தயங்குவதாகத் தெரிய வந்துள்ளது. இனி மேலாவது முன் கோபத்தைக் கட்டுப்படுத்தி மன்னிப்பளிக்க முன்வருவோம்.