"கோவிந்தா" நாமத்தின் பெருமை !!

கோவிந்தா நாமத்தின் பெருமை !!

"கோவிந்தா" நாமத்தின் பெருமை

திருப்பதிக்கு வந்ததும் ஒவ்வொருவரின் காதில் பதிவது, அங்கு ஒலிக்கும் வேங்கடேச ஸ்தோத்திரம்தான். இதை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி. அந்த பாடலில் வரும் வரிகளில் ஒன்று, 'விநா வேங்கடேஸம் ந நாதோ ந நாத' என்பதாகும். இதற்கு 'உன்னைத் தவிர வேறு தெய்வமில்லை. உன்னையே சரணடைகிறேன்' என்று பொருள்.

இப்படி வேண்டி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு, சீனிவாசப் பெருமாளின் அருள்காட்சி கிடைத்தது. இந்த துதியைச் சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு, திருப்பதி ஏழுமலையானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். ஏழுமலையானே, மார்க்கண்டேய மகரிஷியிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். “என்னை 'கோவிந்தா' என்று ஒரு முறை அழைத்தால், நான் உனக்கு கடன்பட்டவன் ஆகிறேன்.

இரண்டாவது முறை 'கோவிந்தா' என்று அழைத்தால், அந்த கடனுக்கு வட்டி செலுத்துவேன். மூன்றாவதாக ‘கோவிந்தா' என்று கூப்பிட்டால், அந்த வட்டிக்கு வட்டி தருவேன்” என்று கூறியுள்ளார். அதனால்தான், திரு மலை திருப்பதி முழுவதும், 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற சரண கோஷம் எதிரொலிக்கிறது. ஏழுமலையான், குபேரனுக்கு மட்டுமே கடன்பட்டவராக இல்லாமல், தன்னுடைய நாமத்தை உச்சரிப்பவருக்கும் கடன்பட்டவராக இருப்பது விசித்திரமான விஷயம்தான்.

Tags

Next Story