இசக்கி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழாவில் பெண்களின் சுமங்கலி பூஜை

இசக்கி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழாவில் பெண்களின் சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டவர்கள்

அரமன்னம் இசக்கியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு பெண்களின் சுமங்கலி பூஜை நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் அரமன்னம் சாலியத் தெரு இசக்கி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தொடர்ந்து தீபாராதனையும்,கோமாதா பூஜையும் நடந்தது. கோவில் சன்னதியில் நடத்த சுமங்கலி பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு வித்யா கோபாலநாம அர்ச்சனை, இரவு 7 மணிக்கு புஷ்பா பிஷேகம், 9 மணிக்கு சமய உரை, தொடர்ந்து டான்ஸ், ஆகியவை நடைபெறுகிறது.

திருவிழா முடிவு நாளில் கூட்டு பொங்கல் நடைபெற்று மதியம் வலிய படுக்கை பூப்படை வாருதல் ஆகியவற்றுடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story