கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம்

கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம்

குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம் நடந்தது.

குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுவாமி கண் திறப்பு வைபவம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு கண் திறப்பு வைபவம் நடந்தது. மலைப்பாளையம் விநாயகர் கோவிலிலிருந்து முளைப்பாரி அழைத்தல் வைபவம் நடந்தது. முதல் கால யாக சாலை பூஜை துவங்கிய நிலையில், இன்று, நாளை யாக சாலை பூஜைகள் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளன. டிச. 15 காலை 08:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். இன்று இரவு 07:00 மணியளவில் கோவில் வளாகத்தில் கிருபானந்த வாரியார் பிரதான சிஷ்யை தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா, ஆன்மீக சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்து சுவாமியின் அருள்பெற வேண்டி விழாக்குழுவினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story