ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருத்தலங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருத்தலங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருத்தலங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருத்தலங்கள்

1.சென்னிமலை கோயில் கொங்கு நாட்டில் உள்ள ஏழு மலைகளில் இரண்டாவது மலையாக அமைந்து விளங்குவது சென்னிமலை .இவ்வூரில் சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது .சிவன் கோயில் இறைவன் கைலாயநாதர் என்று அழைக்கப்படுகிறார் சென்னிமலைக்கு பிறகு கிரகிரி ,சிகரகிரி,சென்னியங் கிரி ,புட்பகிரி என்று பல பெயர்கள் உண்டு இம்மலையில் பல்வேறு மூலிகைகள் உள்ளன சென்னிமலை தொடர்ச்சியாக அடுக்கடுக்காக அமைந்து மலைசிறிது சிறிதாக உயர்ந்து செல்கின்றது மலை மீது ஏறி செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு.

மலையின் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன மலையின் தென்மேற்கு சரிவில் மாமாங்க தீர்த்தமும் ,காண சுணை என்னும் தீர்த்தமும் சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன .மலையின் வட பக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. முருகன் நடுநாயகமாக மூர்த்தியாக செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரை சுற்றி 8 நவகிரகங்கள் உள்ளன. கந்தசஷ்டி கவச பாடல் பெற்ற தலமாக இது விளங்குகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றின் கரையில் "கொடுமணல்" என்ற கிராமம் சீரும், சிறப்புடனும் இருந்து வந்தது. ஒரு பெரிய பண்ணையாரின் காராம் பசு ஒன்று அனுதினமும் ஓரிடத்தில் சென்று தனது மடிப்பால் முழுவதையும் அந்த இடத்தில் சொரிந்து வந்தது .பண்ணையார் அந்த இடத்தை தோண்டி பார்த்தபொழுது ஒரு கற்சிலை விக்ரகம் தென்பட்டது. அதை எடுத்து ஆனந்தப்பட்ட பண்ணையார் அதன் முகப்பொலிவில் ஈடுபட்டு மெய் மறந்தார். பின் விக்கிரகத்தை ஆராய்ந்த பொழுது இடுப்பு வரை அந்த விக்ரகம் நல்லா வேலைப்பாடுடனும் முகம் அதி அற்புதமாகவும் இருந்ததாகவும் இடுப்புக்கு கீழ் கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த விக்கிரகத்தின் மீது சிற்பி ஒளியால் அடித்த பொழுது ரத்தம் பீறிட்டு வந்தது கண்டு பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது.சென்னிமலைநாதர் கோயிலுக்கு சிறிது தூரம் சென்றால் ஒரு தனி கோயில் அமைந்துள்ளது . கோயிலில் வள்ளி தெய்வானை ஆகியதேவியர் இருவரும் எழுந்தருளியினர் . தேவியர் கோயிலில் இருந்து மேலும் தொடர்ந்து ஓர் ஒற்றையடி பாதையில் சென்றால் சிறிது தூரத்தில் ஒரு குகை காணப்படுகிறது இந்த குகையில் ஆற்றில் பிண்ணாக்கு சித்தர் என்று ஒரு சித்தர் வாழ்ந்ததாக கூறுகின்றனர் இந்த குகைக்கு சன்னியாசி குகை என்று பெயரும் உண்டு.

2. சிவன் மலை கோயில் காங்கயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன்மலை என்னும் மலைத்தளம் அமைந்துள்ளது .இதற்கு சிவகிரி, சிவமலை ,சேய்மலை என்ற மற்ற பெயர்களும் உண்டு .இங்கு ஒரு பரமேஸ்வரன் திருக்கோயில் உள்ளது ஆனால் திருக்கோயில் அனுமார் கோயில் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள தாழியில் இருக்கும் பழைய நெய் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் சக்தி வாய்ந்தது என்று கூறுவர். இந்த கோயிலின் சிறப்பு அம்சம் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்று பக்தர்களின் கனவில் வரும் பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வதாகும். அந்தப் பொருள் கோவில் மூலவர் அறைக்கும் முன்பாக உள்ள கண்ணாடி பேழைக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

Tags

Next Story