அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா  

அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா  
சாமித்தோப்பில் கொடியேற்று விழா
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி தை போன்ற மாதங்களில் 12 நாட்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டைய தைத்திருவிழா இன்று 19ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறந்தல் நிகழ்ச்சி நடந்தது. 5 மணிக்கு ஐயாவுக்கு பணிவிடையுடன் தொடர்ந்து கொடி பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சரியாக காலை 6.30 மணிக்கு பூஜித குரு சுவாமி தலைமையில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூஜித குருமார்கள் சுவாமி தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு ஐயா தொட்டில் வாகனத்தில் பகுதியை சுற்றி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த விழா 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story