மரங்களின் தெய்வீக சக்தி !

மரங்களின் தெய்வீக சக்தி !

மரங்களின் தெய்வீக சக்தி

இந்துக்களின் சாஸ்திர முறைகளின் படி மரங்களுக்கும் ஆன்மிகத்திற்கும் மிக நெருங்கமான தொடர்பு உண்டு என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.

ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கடவுளின் அம்சத்தைப் பெற்றிருக்கும். அதனால் தான் ஒவ்வொரு கோவிலுக்கும் தல விருட்சம் என ஒரு மரம் தனியாக இருக்கும். ஒவ்வொரு மரங்களை நட்டு வளர்ப்பதாலும், அவற்றிற்கு நீர் ஊற்றி பராமரிப்பதாலும் ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கிறது.

* துளசி - துளசி, மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா. பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசியிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

* சந்தனமரம் - சந்தனமரம், மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றது. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

* அத்திமரம் - அத்திமரம், தத்தாத்திரேயரின் அம்சமாகும். மஹாவிஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மன சாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

* மாமரம் - மாமரம், மஹாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடைய காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.

* அரசமரம் - அரச மரம், பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வலம் வர புத்திர தோஷம் நீங்கும்.

* ஆலமரம் - ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைக்கூடும்.

* மருதாணி - மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து கொண்டால் கெட்ட கனவுகள் வராது.

* ருத்ராட்சமரம் - ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். ருத்ராட்ச கொட்டையை அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகும்‌. கோபம் குறையும்‌. மனதில் சாந்தம் உண்டாகும்.

* வேப்பமரம்- வேப்ப மரம், சக்தியின் அம்சமாகும். இம்மரத்தை சுற்றி மஞ்சள், குங்குமம் பூசி மஞ்சள் ஆடையை கட்டி மாலை சூட்டி மரத்தை வலம் வந்து வணங்கினால் சக்தியின் அருள் கிடைக்கும்.

* வில்வமரம் - வில்வ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

Tags

Next Story