சிதை அழகு ருக்மணி வரலாறு !!

சிதை அழகு ருக்மணி வரலாறு !!

ருக்மணி கிருஷ்ணர்

ருக்மணி விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவாள். ருக்மணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன. திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் முதன்மையான மனைவி ஆவார். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன் ஆவார். பிரத்தியுமனனுக்கும், ருக்மியின் மகளான ருக்மாவதிக்கும் பிறந்தவரே அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். ருக்மணி இலக்குமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

ருக்மணியின் சகோதரன் ருக்மி தன் நண்பனும், சேதி நாட்டு அரசனுமான சிசுபாலனுக்கு தன் சகோதரி ருக்மணியைக் மணமுடித்து கொடுக்கத் தானாகவே முடிவு செய்ததால், ருக்மணி தமது துயரையும் தாம் கிருஷ்ணரின் குணங்களால் முன்னமே கவரப்பட்டவள் என்பதையும் தம்மை வந்து காப்பாற்றாவிடில் உயிரை விட்டுவிடப் போவதாக முடிவு செய்திருப்பதையும் கிருஷ்ணருக்கு செய்தியை தூது சொல்லியனுப்பினார்.

செய்தி பெற்று கவலையுற்ற கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு கிளம்பினார். மறுநாள் ருக்மணி, அம்பிகை பார்வதி தேவியின் திருக்கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டி பிரார்த்தித்து திரும்பும் வழியில், கிருஷ்ணர், ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றி கொண்டு துவாரகை திரும்பி திருமணம் செய்து கொண்டார்.

Tags

Next Story