தீம்பிலான்குடி மகாதேவர் பங்குனி திருவாதிரை திருவிழா

தீம்பிலான்குடி மகாதேவர் பங்குனி திருவாதிரை திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கியது 

பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயிலில் பங்குனி திருவாதிரை திருவிழா கொடியேற்றம் தொடங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்மனை பகுதியில் தீம்பிலான்குடி மகாதேவர் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவாதிரை திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் கொடியேற்றம் இன்று காலை நடந்தது. குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கோயில் ஸ்ரீகாரியம் மோகன்குமார், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகள் திருக் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த கொடியேற்ற திருவிழாவையொட்டி குலசேகரம், அருமனை,திருவட்டார் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story