சித்திரைப் பெருந்திருவிழா திருக்கோடிக்காவல் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

சித்திரைப் பெருந்திருவிழா திருக்கோடிக்காவல் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

சித்திரைப் பெருந்திருவிழா திருக்கோடிக்காவல் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா (பிரம்மோற்ஸவம்) ஏப்ரல் 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 10 நாள்களுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் படிச்சட்டம், பூதம், யானை, அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெறவுள்ளன. இதையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி கோயில் ஐதீக முறைப்படி சிறப்பு பூஜையுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல் காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story