வேங்கட ஜல நாராயண பெருமாளுக்கு திருமஞ்சன விழா

வேங்கட ஜல நாராயண பெருமாளுக்கு திருமஞ்சன விழா

திருமஞ்சன திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வேங்கட ஜல நாராயண பெருமாளுக்கு திருமஞ்சன விழா நடைபெற்றது.
ராணிபேட்டை வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் வேங்கட ஜல நாராயண பெருமாளுக்கு திருமஞ்சன திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மூலிகைகள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. மடாதிபதி ஜல குரு பழனி சுவாமிகள், ருத்ரா சுவாமிகள் தீபாராதனை செய்து, பெருமாளை தினமும் வணங்கும் பக்தர்களுக்கு உடல் ஆரோக்கியம், சகல சவுபாக்கியம் கிட்டும் என ஆசி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி அறங்காவலர் வாசுதேவ சுவாமிகள் செய்திருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story