அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி!
திருத்தணி!
சைவர்கள் முருகனடியார்கள் மிகுதியாக ஈடுபாடு கொண்ட தலங்களுள் திருத்தணியும் ஒன்றாகும். மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று கந்தபுராணம் போற்றுகிறது. 15 ஆம் நூற்றாண்டில் தான் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருத்தணி சேர்க்கப்பட்டது.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலுக்கு அபாரஜித வர்ம பல்லவன் பராந்தக சோழன் முதலாம் ராஜ ராஜ சோழன் ராஜேந்திர சோழன் விக்ரம் சோழன் விஜயநகர மன்னர்கள் மற்றும் கார்வெட் ஜமீன்தார்கள் திருப்பணிகள் செய்துள்ளனர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தப்ப தேசிகர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் பாம்பன் சுவாமிகள் உள்ளிட்டோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.
தேவர்களின் துயர் தீர்க்க சூரபத்மனுடன் பெரும் போரும் வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறுபோரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் இது தணிகை என்று பெயர் பெற்றதாக புராண வரலாறு திருத்தணி முருகப்பெருமானை சூரிய பகவானும் வருடத்தில் மூன்று நாட்கள் வழிபடுவதாக வரலாறு பங்குனி மாதம் முதல் நாள் சூரியனின் கிரகணங்கள் சுப்பிரமணிய சுவாமியின் பாதங்களிலும் மறுநாள் மார்பிலும் மூன்றாம் நாள் தலைப்பகுதியிலும் விழுவது அற்புதம் இங்கு மகாவிஷ்ணு உருவாக்கிய விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி சுப்பிரமணியரை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்மலைமீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தேவஸ்தான தேவ தச்சனால் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
மலையடிவாரத்தில் இருந்து மலை மீது உள்ள கோயிலுக்கு செல்ல 365 படிகள் உள்ளது இது வருடத்தின் 365 நாள்களை குறிப்பதாக உள்ளது. ஆண்டுதோறும்டிசம்பர் 31ஆம் தேதி மாலை கோவிலில் தீபம் ஏற்றியதும் அடிவாரத்தின் முதல் படிக்கட்டில் இருந்து ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் வீதம் திருப்புகழ் பாடி நிவேத்தியம் செய்து பக்தர்கள் தீபம் ஏற்றுவார்கள் இவ்வாறு 365 படிகளிலும் தீபம் ஏற்றப்படும் இக்கோயில் நான்கு பிரகாரங்களை கொண்டது.
இந்த முருகப்பெருமானுக்கு மயிலுக்கு பதில் ஐராவதம் என்ற யானையே வாகனமாக திகழ்கிறது இந்த ஐராவதம் யானை முருகப்பெருமானுக்கு தன்மகள் தெய்வானையை மணம் செய்து வைத்த இந்திரன் மகளுக்கு சிதனமாக அளித்தது முருகப்பெருமான் சினம் தணிந்து அருள்தரும் தலம் என்பதால் இங்கு சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.