பாபநாசம் ஸ்ரீ சுந்தர காளியம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

பாபநாசம் ஸ்ரீ சுந்தர காளியம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர காளியம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் எதிரே 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story