சாத்தனூரில் திருமூலர் கோயில் சம்வத்ஸரா அபிஷேகம் விஷேச பூஜைகள்

சாத்தனூரில் திருமூலர் கோயில் சம்வத்ஸரா அபிஷேகம் விஷேச பூஜைகள்

சிறப்பு அபிஷேகத்தில் சுவாமி

தஞ்சை மாவட்டம் 69.சாத்தனூரில் திருமந்திரம் அருளிய திருமூலர் கோயில் 5ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் விஷேச பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடந்தது.

திருமந்திரம் அருளிய திருமூலர் அவதரித்த தஞ்சை மாவட்டம் 69 சாத்தனூரில் திருமண கோயிலில் ஐந்தாம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

சைவ ஆதீனங்களில் பிரதானமாக விளங்கும் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் திருமூல நாயனாருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. திருமந்திரம் முற்றோதுதளுடன் தொடங்கி, மதுரை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை சார்பில் திருமந்திர இன்னிசையும்,

கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்களும், திருமந்திரம் ஒப்பவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பிரபல திரைப்பட இயக்குநர் முனைவர் யார் கண்ணன் திருமந்திரம் குறித்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story