திருப்பதி ஏழுமலையான் கோவில் : ஏகாதசி துவார தரிசன டிக்கெட்டு முன்பதிவு தேதி வெளியீடு !!

திருப்பதி ஏழுமலையான் கோவில் : ஏகாதசி துவார தரிசன டிக்கெட்டு முன்பதிவு தேதி வெளியீடு !!

Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியது, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசிக்கு 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

இந்த வார விசேஷங்கள்: 17-12-2024 முதல் 23-12-2024 வரை வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார். துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story