வளவனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருத்தேர் திருவிழா

வளவனூர்  ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருத்தேர் திருவிழா

தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

வளவனூர் குமாராபுரி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருத்தேர் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

விழுப்புரம் அடுத்த வளவனூர் குமாரபுரி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் 245வது ஆண்டு பிறமோற்சவம், கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 9ம் தேதி மயான கொள்ளை உற்சவம் நடந்தது. பகல் 1 மணிக்கு சிம்ம வாகனத்தில் அங்காளம்மன், பாவாடை ராயன் சாமிகள் வீதியுலா நடந்தது.

இரவு 11 அம்மன் மயானத்துக்கு சென்று, மயான கொள்ளை உற்சவமும் நடந்தது. தொடர்ந்து 10ம் தேதி இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் வீதியுலாவும், 11ம் தேதி யானை வாகனம், 12ம் தேதி குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று 14ம் தேதி நேற்று முக்கிய விழாவான மாசி தேரோட்டம் நடந்தது.

காலை 11 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷே, ஆராதனை நடந்தது. பிறகு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு, தங்க கவசத்தில் அங்காளம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டம் தொடங்கியது.

அங்காளம்மன் கோவில் வீதியில் புறப்பட்ட தேர், விழுப்புரம்–பாண்டிரோடு, மார்க்கெட் வீதிகள் வழியாக சென்று, கோவிலில் மாலை நிறைவடைந்தது. கோவில் தர்மகர்த்தா கலிவரதன் தலைமையில் அறங்காவலர் குழுவினர், வளவனூர் குமாரபுரி மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து 15ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story