திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் !

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் !

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோயிலாகும். தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான சின்னமாக திகழ்வது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் ஆகும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் எடுத்த இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது அதற்கு இந்த கோபுரத்தை சின்னமாக பார்க்காமல் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டும் என்று ஓமந்தூரார் விளக்கம் அளித்தார் இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருவில்லிபுத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . திருமாலின் வராக அவதாரம் நிகழ்ந்த தலமாக திரு வில்லிபுத்தூர் கருதப்படுவதால் இதை "வராக ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது விருதுநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தென்னிந்திய வரலாற்றில் திருவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது . இந்த ராணிக்கு வில்லி, கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர்ஒரு நாள் அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார் இந்த உண்மை தெரியாமல் வில்லி அவர் சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டிருந்தார் வெகு நேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்து போய் சிறிது நேரம் தூங்கினார் அவரது கனவில் கடவுள் அவர் சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதனை அவருக்கு விளக்கினார் உண்மை புரிந்ததும் தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளை திருத்தி அமைக்க ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக இந்த நகரம் திருவில்லிபுத்தூர் என்ற பெயர் பெற்றது மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் பிறந்ததின் காரணமாக திருவில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்டது. மதுரையை ஆண்ட மன்னர்கள் திருவில்லிபுத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள். கோவில் முழுவதும் பல சந்நிதிகளும் மண்டபங்களும் கலைநயமிக்க சிற்பங்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன .இக்கோயிலின் அர்த்தமண்டபத்தில் தங்க முலாம் பூசப்பட்ட மஞ்சத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் பெருமாள் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் மட்டும்தான் பெருமாள் கருடாழ்வருடன் காட்சி தருகிறார் .ஆண்டாளின் அவதார தினமாக கருதப்படும் ஆடிப்பூரம் அன்று தேர் திருவிழா நடைபெறும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் இங்கு உள்ளது மேலும் இக் கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன பங்குனி உத்திரத்தன்று பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும் மேலும் இங்கு வசந்த சேவை விழா, பிரம்ம உற்சவம், தெப்பத் திருவிழா, போன்ற திருவிழாக்களும் நடைபெறும்.

Tags

Next Story