காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச தேரோட்ட விழா - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச தேரோட்ட விழா - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று நடைபெற உள்ள தைப்பூச தேரோட்ட விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று மதியம் 3.15 மணிக்கு, தைப்பூச தேரோட்ட விழா வெகுவிமர்சியாக நடக்க உள்ளது. இருப்பதையொட்டி, கோவிலை சுற்றி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி., 7 இன்ஸ்பெக்டர், 17 எஸ்.ஐ., 200போலீசார் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து அறநிலையத்துறையின் சார்பில், நாமக்கல் உதவி ஆணையர் சாமிநாதன் தலைமையில், அறநிலைத்துறையை சேர்ந்த 2 இன்ஸ்பெக்டர்கள், 5 செயல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆங்கிலேயர் காலம் முதல் நடந்து கொண்டிருக்கும் தற்காலிக நீதிமன்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நடுவர் சுரேஷ்பாபு தலைமையில் தற்காலிக நீதிமன்றம் நேற்று அமைக்கப்பட்டது. முதல் நாளான நேற்று 69 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தீயணைப்புதுறை, மின்சாரதுறை, மருத்துவத்துறை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் என பல்வேறு துறைகள் அந்தந்த துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள தனி தனி அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Tags

Next Story