ஆரத்தி எடுப்பதன் பின்னுள்ள இரகசியம் என்ன?

ஆரத்தி எடுப்பதன் பின்னுள்ள இரகசியம் என்ன?

ஆரத்தி

விஞ்ஞானமும் நவீன வாதமும், முற்போக்கு வாதமும் எல்லாம் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தியிருந்த போதிலும் சில நம்பிக்கைகள் இன்றும் தவிர்க்க முடியாத வையாக நீடித்து நிற்கின்றன.

இதில் ஒன்று தான் ஆரத்தி எடுப்பது. தூரத்துப் பயணங்கள் கழிந்து வரும் குடும்பத்தினர், திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு வரும் தம்பதிகள், மகப்பேறு முடிந்திருக்கும் தாய் முதலியோரைப் பொதுவாக ஆரத்தி எடுப்பதுண்டு. தண்ணீரில் மஞ்சள் கரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்க்கின்றனர்.

மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகின்றது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்கள் எழுப்பி சம்பந்தப் பட்ட நபரின் உடலுக்குச் சுற்றும் மூன்று முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறன் உண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம் ஆகும்.

Tags

Next Story