காலையில் கோலமிடுவது எதற்கு?

காலையில் கோலமிடுவது எதற்கு?

கோலமிடுவது

அதிகாலையில் முற்றம் கூட்டித் தெளித்த பின் வாசலில் அழகான கோலமிடுவது நம் நாட்டில் இன்றும் செய்து வருகின்றோம்.

இதில் தனிப்பட்ட சிறப்புக்கள் எதுவும் இல்லயானாலும் இதில் ஒர் பெரிய பௌதிக உண்மை அடங்கியிருக்கின்றது மனிதன் பிற உயிரினங்களிடம் கருணை காட்டி வாழ்வதற்கு அனேகம் உதாரணங்கள் நம்மிடையே உண்டு. நாம் உணவாகப் பயன்படுத்தும் அரிசியின் பொடியே முற்காலத்தில் கோலம் வரைக்க உதவும் மாவு.

இன்றும் சிலராவது அரிசி மாவில் கோலம் வரைக்கின்றனர். நாம் உணவருத்தும் முன் எறும்பு முதலிய சிறுபிராணிகட்கு உணவளிப்பது என்ற மனிததர்மத்தின் பாகமே கோலம் வரைத்தல். ஆனால் கோலம் வரைத்த இடத்தில் எப்போதும் எறும்பு முதலியவை புகுந்து மாவை உண்ணுவது நாம் காண்பதில்லை.

Tags

Next Story