காலையில் எழும்முன் பூமியைத் தொட்டு தலையில் வைப்பது ஏன்?
பூமியைத் தொட்டு வணங்குவது
தூக்கத்திலிருந்து விழித்ததும் படுக்கையில் இருந்து கைகளை மலர விரித்து நிதிக்கும் கல்விக்கும் சக்திக்குமாக லெட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்ற தேவிமாருக்கு ஜெபங்களைக் கூறியபின் கால்களை தரையில் வைக்கும்முன் பூமிதேவியைத்தொட்டு தலையில் வைத்து க்ஷமாபண மந்திரம் சொல்ல வேண்டுமென்று ஆசாரியர்கள் போதித்துள்ளனர்.
'சமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டலே விஷ்ணுபதி நமஸ்துத்யம் பாதஸ்பர்சம் க்ஷ மஸ்வமே!'
என்று உரைத்து பூமியைத் தொட்டு தலையில் வைக்க வேண்டும் என்பதே.
சிலர் இதை மூடநம்பிக்கை என்று பரிகசித்து தள்ளுவதுண்டு. ஆனால் இதன் பின்- னுள்ள அறிவியல் இரகசியத்தைக் கவனிப்போம்.
ஒரு நபர் தூங்கும் போது அவர் உடலில் தங்கியிருப்பது 'சமநிலை விசை' அதாவது ஸ்டாடிக் எனர்ஜி அல்லது பொடென்ஷல் எனர்ஜி எனப்படும். ஆனால் விழித்தெழும்பும் போது டைனமிக் அல்லது கைனடிக் எனர்ஜி அதாவது சலன விசையாக மாறுகின்றது.
பூமியைத் தொடும் போது உடம்பிலுள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைனடிக் எனர்ஜி நிறைக்க வேண்டும்.
விழித்தெழும்போது கால் முதலாவது தரையில் தொட்டால் ஆற்றல் கீழ்நோக்கி ஒழுகி உடல் பலம் குறைகின்றது. ஆனால் கை முதலாவது தரையைத் தொடும் போது ஆற்றல் மேல்நோக்கி பரவி கை வழியாக வெளியேறி உடல் பலம் இரட்டிக்கின்றது.
இவ்வளவு பெரிய ஒரு விஞ்ஞான இரகசியம் ஒளிந்து கிடப்பதால் தான் நம் நாட்டு ஆசாரியர்கள் விழித்தெழுமுன் பூமியைத் தொட்டு தலையில் வைக்க வேண்டும் என்று பின் தலைமுறைகளுக்கு கற்பித்துச்சென்றனர்.