குத்து விளக்கைக் கொளுத்தும் போது வடக்குப்பக்கத்து வாசல் அடைத்துப் போடுவது ஏன்?
குத்து விளக்கு
சூரிய உதயத்திலும், மறையும் போதும், விளக்கேற்றும்போதும், விளக்கைக் கொளுத்திக் கொண்டு வரும் போதும் வடக்குப் பக்கத்து வாசல் அடைத்து போட வேண்டும் என்று முதியோர்கள் உபதேசிக்கும் போது அதை அடிப்படையற்ற நம்பிக்கை என்று உதறிவிடத்தான் தோன்றும்.
சூரிய உதயத்திலும் சூரியன் மறையும் போதும் விளக்கு கொளுத்துவது வழக்கம். காலை பிரம்ம முகூர்த்தத்திலும் மாலை கோதுளி முகூர்த்தத்திலுமே விளக்கேற்றுவது.சூரிய உதயத்துக்கு முன்னுள்ள நாற்பத்திஎட்டு நிமிடங்களே பிரம்ம முகூர்த்தம் சூரியன் மறைவு முதல் நாற்பத்திஎட்டு நிமிடங்கள் கோதுளி முகூர்த்தம் எனப்படும். காலையில் விளக்கேற்று - வது கல்விக்கு வேண்டியும் மாலை செல்வத்துக்- காகவும் என்பது நம்பிக்கை. பிரம்மமுகூர்த்தம் மூளையின் கல்வியை ஏற்கும் பாகம் செயல்படும் நேரம். இதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கின்றது.
தென் துருவத்திலிருந்து வடதுருவத்துக்கு காந்த சக்தி ஒழுகுகின்றது. அதனால் விளக்கு கொளுத்தும் நேரம் வடக்கு வாசல் திறந்திருந்தால் விளக்கின் சுடரின் சக்தி காந்த சக்தியுடன் வெளியேற வாய்ப்புண்டு. மேலும் வாசல் வழியாக விஷ அணுக்கள் நுழைவதையும் தவிர்க்கலாம். விளக்கும் எரியும் எண்ணையும் சூடேறியதும் உயரும் பிராண சக்தி அணுக்களைத் தடுக்கும். இந்த பிராண சக்தியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காந்தப் பிரவாகம் கொண்டு செல்லாமலிருக்க வடக்கு வாசல் அடைத்து வைப்பது நல்லது.