தீயை ஊதிப்பெருக்கவோ ஊதி அணைக்கவோ செய்யக்கூடாது என்பது ஏன்?

தீயை ஊதிப்பெருக்கவோ ஊதி அணைக்கவோ செய்யக்கூடாது என்பது ஏன்?

தீ

மனிதன் தீயைக் கண்டு பிடித்திருத்திருக்காவிட்டால் மனித சரித்திரம் வேறொன்றாயிருக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. தெய்வ சந்நிதி நிறைந்த பூமியின் அற்புதப் படைப்பாக யவனபுராணம் தீயைச் சிறப்பிக்கின்றது. அது சிருஷ்டியும் சங்காரமுமாக விளங்குகின்றது.

நெருப்பில் உணவை வேகவைத்து அதன் ருசியறிந்த மனிதனுக்கு இப்போது உணவென்றாலே வேக வைத்த உணவுதான். உணவு சமைக்க மனிதர் நெருப்பை வீட்டுக்குள் பாதுகாத்து வைக்க அடுப்புகள் அமைத்தனர்.

தேவைக்கேற்ற படி தீயைக் கூட்டியும் குறைத்தும் வைத்துப் பயன்படுத்திவந்தனர். தீ அணையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆதிமனிதனுக்கு இருந்தது. அன்றும் நெருப்பை ஊதிப் பெருக்காமலும் ஊதி அணைக்காமலும், வேறுவழிகள் கடை பிடித்திருந்தனர்.

நெருப்பை தேவனாகக் கருதியிருந்ததனால் அதை எச்சில் நிறைந்த அசுத்தமான வாயால் ஊதிப்பெருக்குவதும் ஊத அணைத்தலும் கூடாதென்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். குனிந்திருந்து கவனமில்லாமல் தீயை ஊதிப்பெருக்க முயற்சி செய்யும் போது தலைமயிர், முகம், ஆடைகள்முதலியவற்றில் தீ பிடிக்க வாய்ப்புகள் ஏராளம்.

இதே விபத்து தீயை ஊதி அணைக்கும் போதும் உண்டாகலாம். அறிவுரையாக இதை திரும்பத்திரும்பக் கூறி முன்னோர்கள் பின் தலைமுறைகளை விபத்திலிருந்து காப்பாற்றி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story