சூரியன் மறையும் நேரமும், இரவும் ஏன் பெருக்கிக் கூட்டி நீர்த் தெளிக்கக்கூடாது?

சூரியன் மறையும் நேரமும், இரவும் ஏன் பெருக்கிக் கூட்டி நீர்த் தெளிக்கக்கூடாது?

சூரியன்

பெருக்கிக் கூட்டித் தெளிக்கும் ஏற்பாடு இன்றைய தலை முறையினர் கடைபிடிப்பதில்லை என்றாலும் நம் நாட்டினர் பண்டைக்காலம் முதல் செய்து வந்தனர்.

மாலையில் வெயில் மறையும் முன்னதாக வே வீட்டுப் பெண்கள் முக்கியமாகச் செய்யும் ஓர்கடமை பெருக்கிக் கூட்டி சுத்தம் செய்வது. மேற்கு வானில் சூரியன் மறையும் முன் அக் கடமையை செய்வது வழக்கம். மாலை நேரம் வந்து சேரும் மூதேவியை வீட்டிலோ சுற்றத்திலோ நுழைய விடாமலிருக்க, விளக்கு கொளுத்தி ஐசுவரியத்தை வரவழைப்பதற்கு முன் இக்கடமையை செய்து வந்தனர்.

முற்றத்திலுள்ள குப்பைகளை பெருக்கி அகற்றி கங்கையை மனதில் கொண்டு நீர்த் தெளிப்பதையே பெருக்கிக் கூட்டித் தெளிக்கும் கடமையாக நிர்வகிப்பது. ஆனால் இக்கடமையை பொழது சாயும் நேரமும் இரவும் சிலர் செய்வதுண்டு, இப்படி செய்வது தீமையும் பாவமும் என்று முதியோர்கள் கூறுவதுண்டு.

இக்கடமையை பொழுது சாயும் போதும் கரவிலும் செய்யலாகாதென்பதில் தெளிவான காரணமுண்டு, பகல் நேரத்தை விட மாலையிலும் இரவிலும் மனிதனுக்கு பார்வை குன்றியிருக்கும்.. அதனால் சுத்தமாகது என்பதே.

Tags

Next Story