திருநீர் அணிவது எதற்காக?

திருநீர் அணிவது எதற்காக?

திருநீர்

குளியலைப் போலவே திருநீரணிவதும் அன்றாட வாழ்க்கையின் ஓர் முக்கிய பாகமாயிருந்தது முற்காலத்தில்.

முழு விசுவாசத்துடன் ஒருசிட்டிகை திருநீர் எடுத்து நெற்றியில் வைத்த பின்னே பண்டைய பக்தர்கள் ஜெபத்துக்கு அமருவர். ஜெபத்தில் நம்பிக்கை நிறைந்திருப்பது போலவே திருநீரில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

சுத்தமான திருநீர் தயாரிக்கும் முறை காலப்போக்கில் மாற்றமடைந்த போதிலும் பழைய முறைகளை கடைபிடிப்பவர்களுமுண்டு புல மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை சிவராத்திரி அன்று உமியில் எரித்துக் கிடைக்கும் சாம்பலை தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலர வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் நெற்றியிலிடுவதற்காக பாதுகாத்து வைக்க வேண்டும்.

திருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு திரு நீரணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மைய டையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தியாகத்தின் வடிவமான சிவபெருமானை மகிழ்விக்க மிகச்சிறந்தது திருநீர் அணிதல் என்று இந்துமதம் கருதியுள்ளது. நெற்றி, கழுத்து, தோள், முட்டு முதலிய இடங்களில் திருநீர் அணிய வேண்டும் என்று பொதுவாகக் கூறுவதுண்டு.

திருநீரை நனைத்து அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறைவதனால், ஜூரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீர் பூசினால் ஜுரம் இறங்குவதைக் காணலாம்.

மூலிகைச் செடிகளை சுத்தமான நெயில் ஹோமகுண்டத்தில் வேக வைத்த பின் எஞ்சியிருப் பதை திருவிபூதி என அழைப்பதுண்டு.

Tags

Next Story