ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த எடப்பாடி டீம் 'ஏக்நாத் ஷிண்டே'? இன்று மாலை பாஜக 'ஸ்கெட்ச்' அரங்கேற்றம்?

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த எடப்பாடி டீம் ஏக்நாத் ஷிண்டே? இன்று மாலை பாஜக ஸ்கெட்ச் அரங்கேற்றம்?

அதிமுக

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொள்வதாக அறிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் கூடவே இருந்து குழிபறிக்க காத்திருக்கும் நாளைய 'ஏக்நாத் ஷிண்டே', ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாஜகவுடனான கூட்டணி அமைத்த கட்சிகளையே அக்கட்சி சின்னா பின்னமாக்கி சிதைத்துவிடுவது வாடிக்கை. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி சில சீட்டுகளையாவது பெற முடியும் என்பதற்கு காரணமாக இருந்த அதிமுக, அதெல்லாம் முடியாது கூட்டணி கிடையாது என அறிவித்தால் பாஜக சும்மா இருந்து விடுமா என்ன?

ஒன்றல்ல ரெண்டு ஏக்நாத் ஷிண்டேக்கள்: அதிமுகவை உடைத்து சிதைப்பதற்காக 2 முக்கிய தலைவர்களை தமிழ்நாட்டு ஏக்நாத் ஷிண்டேக்களாக பாஜக ஏற்கனவே தயார் செய்திருக்கிறது என்பதை நாடும் ந் நாட்டு மக்களும் நன்கறிவார்கள். அதிமுகவை உடைக்க இவர்கள் செய்த சதியின் உச்சமாகத்தான் இனி பாஜக கூட்டணியே வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இருந்த போதும் இந்த 2 தலைகளும் தானாக போகட்டும் என காத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

ஓ.பன்னீர்செல்வத்துடன் ரகசிய சந்திப்பு: தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களை தீவிரமாக கண்காணிப்பதை புரிந்து கொண்டாலும் பாஜக கொடுத்த அசைன்மெண்ட் என்னவோ அதை கன கச்சிதமாக செய்து கொண்டே இருக்கிறாராம் ஏக்நாத் ஷிண்டேக்களில் சீனியர் ஒருவர். சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து பாஜக கூட்டணி இல்லை என அறிவித்த அன்றே, ஓ.பன்னீர்செல்வத்தை 'ஏக்நாத் ஷிண்டே' சந்தித்து பேசினாராம். எப்படி எல்லாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் ஸ்கெட்ச்சை கொடுத்து ஆலோசித்துள்ளாராம் ஏக்நாத் ஷிண்டே.

பாஜக போனை எடுக்காத அதிமுக.. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பிரதமர் வேட்பாளராகிறார் எடப்பாடி? திருப்பம் இன்று மாலை ஓபிஎஸ் அறிவிப்பு: இந்த அஜெண்டாபடியே இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் தமது அடுத்த முடிவுகளை அறிவிக்க இருக்கிறாராம். ஆனாலும் எது வந்தாலும் சமாளிப்போம் என திடமான முடிவோடு இருக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு. எத்தனை பேர் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாலும் எத்தனை சதித் திட்டம் தீட்டினாலும் தொண்டர்களும் கட்சியும் என் பக்கம் இருக்கும் போது அதில் எந்த கவலையும் இல்லை.. எந்த வழக்கும் எதுவும் செய்ய முடியாது.. எதையும் எதிர்கொள்வோம் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

Tags

Next Story