லியோ டிரெய்லர்; விஜய் பேசும் ஆபாச வார்த்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு

லியோ டிரெய்லர்; விஜய் பேசும் ஆபாச வார்த்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படத்தில் இடைவேளைக்கு முன்னர் வில்லன் விஜய் சேதுபதியை, ஹீரோ விஜய் ஆபாச வார்த்தையில் திட்டுவார். இது சென்ஸார் செய்யப்படாமல் வெளியிடப்பட்டு இருக்கும்.

இதேபோல தற்போது லியோ படத்திலும் விஜய் பேசிய வார்த்தை விவாதப்பொருளாகி உள்ளது. அரசியல் கட்சியினர் பலர் இதுகுறித்த விமர்சனத்தை தற்போது முன்வைத்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வரத் திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் பேசும் விஜய் அரசியலுக்கு வந்தால் பெண்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்காது என விமர்சிக்கப்படுகிறது. அதே சமயம் விஜய்க்கு ஆதரவாகவும் பல சமூக வலைதளப் பதிவுகளைக் காணமுடிகிறது.

ஒரு கதைக்களத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஆபாச வார்த்தைகள் படக்குழுவால் திரைப்படங்களில் சேர்க்கப்படுகின்றன. இதற்கு நடிகர்கள் பொறுப்பாக முடியாது என வாதிடப்படுகிறது. எது எப்படியோ..! இந்த விவாதமே லியோ படத்துக்கு இலவச விளம்பரமாகி உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

Tags

Read MoreRead Less
Next Story