சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

வைகோ

சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவாவதற்கு தங்கள் உயிர்களைக் கொடையாக தந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவு நாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்துகொண்டு உயிர்க்கொடை தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது....

1994 ஆம் ஆண்டில் இருந்து தங்களை நெருப்பு தாறு பார்த்துக் கொண்ட தியாகத் திருவிளக்குகள் நொச்சிப்பட்டி தண்டபாணி இடுமலை உதயன் மேலப்பாளையம் ஜகாங்கீர் உப்பிலியாபுரம் வீரப்பன் கோவை காமராசபுரம் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிற அந்த புனிதமான நேரத்தில் தமிழ்நாட்டினுடைய மேன்மைக்காகவும் தமிழர்களுடைய உயர்வுக்காகவும் நாங்கள் ஆண்டுதோறும் இந்த சூளுரை மேற்கொள்கிற கடமையை செய்திருக்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தும் அரசினுடைய கருத்தும் அதுதான். 13 கோடி மக்கள் தொகை உள்ள பீகாரில் முடித்து விட்டார்கள். அதேபோல இங்கும் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தும்.

கர்நாடக அரசை வலியுறுத்த தான் செய்கின்றார்கள். மத்திய அரசுக்கு எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ , நாங்கள் அனைவரும் சென்று இருந்தோம். நான் துரைமுருகன் தமிழ்நாட்டு எம்பிக்கள் அனைவரும் சென்றிருந்தோம். கர்நாடக அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் அதே நேரத்தில் உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை குழுவும் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று சொல்லியும் கூட கர்நாடக அரசு அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசினம் செய்துவிட்டு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. மூன்றரை லட்சம் பாழாகி கருகிக் கொண்டிருக்கின்ற துயரமான சூழ்நிலையில் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. இதிலே ஒரு மனதாக நேற்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுக்குழு தொடர்ந்து நடத்தி வருகிறோம். வாக்குச்சாவடி முகவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மிசோரம்,ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.5 மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story