அருணாசலேசுவரர் கோயிலில் தரிசனம் ரத்து.!

அருணாசலேசுவரர் கோயிலில் தரிசனம் ரத்து.!

அண்ணாமலையார் கோவில்

அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 28.10.2023 மற்றும் 29.10.2023 ஆகிய இரு நாட்களில் பௌர்ணமி வர உள்ளது. மேலும் 28.10.2023 அன்னாபிஷேகம் நடைபெறுவதால் அன்று பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 06.00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேற்படி தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாக 28.10.2023 மற்றும் 20.10.2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேற்படி பௌர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story