ரயில் மோதி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

ரயில் மோதி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

சிறுவர்கள் இறந்த இடம்


கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த ஜம்பன்னா, அனுமந்தன் ஆகியோர் ஊரப்பாக்கத்தில் வசிக்கின்றனர். இதில் ஜம்பன்னாவின் மகன்களான ரவி, 12, மற்றும் சுரேஷ், 15, ஆகியோர், கர்நாடகாவில் படித்து வருகின்றனர். காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், பள்ளி விடுமுறை என்பதால், பெற்றோரை பார்க்க ஊரப்பாக்கம் வந்திருந்தனர்.

நேற்று காலை 10:00 மணிக்கு, ரவி, சுரேஷ் மற்றும் அனுமந்தப்பா மகன் மஞ்சுநாதன், 11, ஆகிய மூவரும், தண்டவாளம் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு, மூவர் துாக்கி வீசப்பட்டு, அதே இடத்திலேயே பலியாகினர். ரயில்வே போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story