கன்று ஈன்ற பசுவிற்கு முதலுதவி செய்த பேரிடர் மேலாண்மை அலுவலக ஊழியர்கள்

கன்று ஈன்ற பசுவிற்கு பேரிடர் மேலாண்மை அலுவலக ஊழியர்கள் முதலுதவி செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்படும் விதமாக உதவி மையம் வட்டாட்சியர் கல்யாண சுந்தரம் தலைமையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாக மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படுவதாக எழுந்த புகாரில் மாநகராட்சிக்கு சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். அவ்வகையில் நேற்று 8 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜவ்வாதுமலை கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலக பின்புறம் திடீரென சத்தம் கேட்டு அலுவலக ஊழியர்கள் சென்று பார்த்த போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த நிறைமாத பசு கன்று ஈன்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அலுவலர்கள் கால்நடை மருத்துவமனையின் உதவியை நாடிய நிலையில் உடனடியாக நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி மருத்துவருடன் விரைந்து அப்பகுதிக்கு வந்து கால்நடைக்கு தேவையான முதல் உதவிகளை செய்தனர்.

முதல் உதவி செய்வதற்கு அணுகிய போது பசு சற்று தயங்கி நிலையில் அதனுடைய கன்றை அதன் அருகில் நிறுத்தி முதலுதவி செய்த கால்நடை மருத்துவர்கள் நலமுடன் எழுந்து நின்றது. இதனைத் தொடர்ந்து இதனுடைய உரிமையாளரை கண்டறிந்து அவர்களிடம் இது போன்ற நிலையில் இதுபோன்று விட வேண்டாம் என தெரிவித்தனர். கால்நடையின் அவசர தேவை அறிந்து குறித்த நேரத்தில் அனைத்து உதவியும் முன் நின்று செய்த பேரிடர் மேலாண்மை துறை அலுவலக ஊழியர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story