கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டனர்.
வாணாபுரத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் படி 2,500 ரூபாயை நிறுத்தியதை கண்டிப்பது வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story