விதிமீறி மருத்துவ சிகிச்சை: மெடிக்கல் கடைக்கு சீல்

விதிமீறி மருத்துவ சிகிச்சை: மெடிக்கல் கடைக்கு சீல்

சீல் வைக்கப்பட்ட மெடிகல்

விதிகளை மீறி மருத்துவ சிகிச்சை அளித்த மெடிகல் சீல் வைக்கப்பட்டது.

வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மெடிக்கல் கடையில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை கள்ளக்குறிச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் கதிரவன்,வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர் மற்றும் பகண்டை கூட்ரோடு போலீசார் ளையனார்குப்பத்தில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மெடிக்கல் கடையில் ஊசி,ஸ்டெதஸ்கோப், குளூக்கோஸ் உள்ளிட்ட மருத்துவ உபகரண பொருட்கள் பயன்படுத்திய நிலையில் இருந்தது.மேலும், கடை உரிமையாளரின் கணவர் செல்வகோட்டி, 41; என்பவர் உரிய மருத்துவ தகுதியின்றி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததும் தெரிந்தது.

இதனையடுத்து மெடிக்கல் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக் கோரி செல்வகோட்டிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story