சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஏற்காடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஆய்வு


ஆய்வில் ஈடுபட்ட குழுவினர்
சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசு உறுதிமொழி உறுப்பினரான எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த ஆய்விற்கு பின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்காடு அரசு மருத்துவமனையில் இருந்த உடல் மறு கூறாய்வு செய்கின்ற இடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய பிரேத பரிசோதனை கூடம் கட்டி தரப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது. இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா?
என்பது குறித்து இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழி குழுவானது மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினருடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முற்றிலும் நிறைவு பெற்றுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.


