அதிமுகவின் பெருமை எடப்பாடி பழனிச்சாமியால் முடிய போகிறது - ஓபிஎஸ்
ஜெயலலிதா தான் நிரந்த பொதுசெயலாளர் என்பதை ரத்து செய்தவர்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகிகள், 29 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக என்ற பெருமை எடப்பாடி பழனிச்சாமியால் முடிய போகிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஈரோட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டரகள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக கூட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் , அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் பொதுசெயலாளர் ஆகலாம் என்பதற்காக எம்.ஜி.ஆர் விதிகளை உருவாக்கியதாகவும் , கழக சட்டவிதியின் படி தொண்டர்களுக்காக உருவாக்கிய உரிமையை , களீபகரம் செய்து , பணத்தை கொண்டு பொதுசெயலாளர் பதவியை தக்க வைத்தார்கள் என்று குற்றம்சாட்டினார். ஜெயலலிதா தான் நிரந்த பொதுசெயலாளர் என்ற பதவியை ரத்து செய்தவர்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகிகள் , அவ்வளவு ஆசை என்ற ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி சந்தித்த அத்தனை தேர்தலிலும் தோல்வி தான் என்றும் , அதற்கு அவருடைய தவறான கொள்கை , திட்டமிடுதலில் தவறால் தான் என்றும் தோல்விகளுக்கு முழு பொறுப்பு எடப்பாடி பழனிசாமி தான் என்றார். 29 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக என்ற பெருமை எடப்பாடி பழனிச்சாமியால் முடிய போகிறது, அதை தடுக்கவே இந்த உரிமை மீட்புக்குழு பயணம் என்றார்
Next Story