எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற காயத்ரி ரகுராம்

எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்ற காயத்ரி ரகுராம்

வாழ்த்து பெற்ற காயத்ரி ரகுராம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அதிமுக கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட காயத்ரி ரகுராம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று கழக மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை மற்றும் நடன இயக்குநர் செல்வி காயத்திரி ரகுராம் , நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து, கழக கலைப் பிரிவுச் செயலாளர் திரைப்பட இயக்குநர் R.V. உதயகுமார், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட இயக்குநர் நடிகர் S. ரவிமரியா, நட்சத்திரப் பேச்சாளர்களான திரைப்பட இயக்குநர்,

நடிகர் C. ரங்கநாதன், நடிகர் M.S. அருள்மணி, திரைப்பட இயக்குநர் டாக்டர் வீ. ஜெயப்பிரகாஷ், நடிகை ஃபாத்திமா பாபு, திரைப்பட இயக்குநர் B. ஆனந்த், நடிகர்கள் V.M. சுப்புராஜ், கிங்காங் ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.

Tags

Next Story