தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் - எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை. அனைத்து மாவட்டங்களுக்கும் எங்கள் பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரித்து உள்ளோம்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மாதம் உதவித்தொகை 3000 வழங்க வேண்டும், வருடத்திற்கு ஆறு விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வு, மேகதாது, முல்லை பெரியார் அணை தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்பது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம். வெற்றி பிம்பங்களோ விளம்பர நோக்கமா இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் உங்களை எல்லாம் சந்திக்க வருகின்றேன்.
தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.