இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் : ஏ.சிசண்முகம்

இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் : ஏ.சிசண்முகம்

செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி சண்முகம்

குடியுரிமை சட்டம் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அ

ப்போது பேசிய அவர்,கடந்த தேர்தலில் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் நான் தோல்வியடைந்தேன். ஆனால் இந்த முறை முதல் தொகுதியாக வெற்றி பெறுவேன். குடியுரிமை சட்டம் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. வெளி நாடுகளில் இருந்து வரும் தீய சக்திகளை கட்டுப்படுத்தவே தேவைபடும் என கூறினார்.

Tags

Next Story