பிற்படுத்தப்பட்ட சமூக உரிமைக்கான கூட்டமைப்பினர் முதல்வருடன் சந்திப்பு
முதல்வரை சந்தித்த சங்கத்தினர்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சருடன் சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் (Society for the Rights of Backward Communities) ஒருங்கிணைப்பாளர் ரெத்தின சபாபதி, கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, மக்களைவைத் தேர்தல் 2024-லில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களிலும்,
வேலை வாய்ப்புகளிலும் பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடுகள் முறையாகக் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தேசிய மற்றும் மாநிலங்களின் அளவில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைவருக்குமான ஆணையம் (Commission for Diversity, Equity and Inclusion) அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.
Next Story